இலங்கை துவிச்சக்கரவண்டிச் சம்மேளனத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை
இலங்கை துவிச்சக்கரவண்டிச் சம்மேளனத்தின் (Cycling Federation of Sri Lanka) பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை துவிச்சக்கரவண்டிச் சம்மேளனத்திற்காக இடைக்காலக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அநுர மஹாரச்சிஹே தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க, ஆர். சந்திரசேகர, உபாலி ரத்நாயக்க மற்றும் குசலானி விக்ரமரத்ன ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.























