• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி - 4 தாய்லாந்து பெண்கள் கைது

இலங்கை

கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரைன் டிரைவ் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத விடுதி ஒன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

நேற்று (24) வெள்ளவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35 முதல் 43 வயதுக்குட்பட்ட நான்கு தாய்லாந்துப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிலையத்தை நிர்வகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 


 

Leave a Reply