• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிலிருந்து பிரிய விரும்பாத அல்பெர்ட்டா மக்கள்

கனடா

கனடாவின் வளமான எண்ணெய்க் வளங்களைக் கொண்ட அல்பெர்ட்டா மாகாணம், நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்வது குறித்து மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தியது.

இதில் பெரும்பான்மையான மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இருக்கவே ஆதரவு தெரிவித்துள்ளதாக முன்னணி ஊடகமொன்று எதிர்வுகூறியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாக்கெடுப்பில், அல்பெர்ட்டா கனடாவுடன் தான் தொடர வேண்டும் என்று 76.4 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அதேசமயம், மாகாணம் பிரிவது குறித்து சட்டப்பூர்வ வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 23.6 சதவீதத்தினரே வாக்களித்துள்ளனர்.

குடியேற்றம் மற்றும்அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான மீதமுள்ள ஒன்பது கேள்விகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

சில பிரிவுகளில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்த மகத்தான முடிவு, கனடா ஆதரவு மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மறுபுறம், முதல் ஒன்பது கேள்விகளுக்கு 'ஆம்' என்று வாக்களிக்குமாறு அல்பெர்ட்டா அரசாங்கம் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டது.

அதேவேளையில், மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் டேனியல் ஸ்மித் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை உள்ளுர் நேரம் 6:45 மணிக்கு அவர் அல்பெர்ட்டா மக்களிடையே உரையாற்ற உள்ளார். 
 

Leave a Reply