இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நடிகை மில்லி பிரவுன்
சினிமா
நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெளியானது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மில்லி பாபு பிரவுன் நடித்திருந்தார்.
இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜேக் போங்கியோவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிகள் ஆகஸ்ட் 2025-இல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மில்லி, இந்த கோடையில், தத்தெடுப்பின் மூலம் எங்கள் அன்பு பெண் குழந்தையை வரவேற்பதாக பதிவிடிருந்தார்.
மேலும் பெற்றோராகும் இந்த அழகான அடுத்த அத்தியாயத்தை அமைதியாகவும் தனிமையாகவும் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பதிவிட்டிருந்தார்.
நடிகை மில்லி குழந்தை தத்தெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தத்தெடுப்பு எப்போதுமே தனது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.
குழந்தையை பெற்றுக்கொள்வது என்பது என்றாவது ஒருநாள் எதிர்காலத்தில் அமையும் என தான் நம்புவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இத்தாலி நாட்டில் அமைந்துள்ள டோலோமைட்ஸ் மலைத்தொடருக்கு தனது கணவருடன் சுற்றுப்பயணம் சென்றதை, விடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் மில்லி பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து மில்லி பரவுன் தனது கணவருடன் இணைந்து இரண்டாவது குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக பீபிள் என்ற தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.






















