• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே எண்களை நம்பியதனால் ஒருவருக்கு அடித்த அதிர்ஸ்டம்

கனடா

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், 'லொட்டோ மேக்ஸ்' குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென்றுள்ளார்.

40 ஆண்டுகளாகப் பிளம்பராகப் பணியாற்றி வரும் ஸ்டான்லி, கடந்த ஜூலை 24 அன்று வுட்ஸ்டாக் நகரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது இந்த லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 'க்விக் பிக்' முறையில் தனக்குக் கிடைத்த அதே எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததே இவருக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.

லொட்டரி முடிவுகளைச் செயலி மூலம் சரிபார்த்தபோது, தான் 25,000 டொலர் மட்டுமே வென்றதாக ஸ்டான்லி நினைத்துள்ளார்.

ஆனால் அவரது காதலி சரிபார்த்த போதே அது 25 மில்லியன் டொலர் என்பது தெரியவந்தது. அந்தத் தொகை தனது வங்கிச் கணக்கிற்கு வந்த பிறகே, தான் உண்மையாகவே கோடீஸ்வரனாகிவிட்டதை அவரால் நம்ப முடிந்தது.

ஏரிக்கரையில் ஒரு புதிய வீடு மற்றும் கிளாசிக் 'ஹாட்-ராட்' (hot-rod) கார் கொள்வனவு செய்தல், சூரிய ஒளியும் கடற்கரையும் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தனது காதலியை அழைத்துச் செல்வது மற்றும் தனது மகள் மற்றும் பேத்தியைப் பரிசுகளால் மகிழ்விப்பது என இந்த பரிசுப் பணத்தில் செய்யப் போகும் விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.

தனது நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் இந்தத் தகவலை மெதுவாகத் தெரிவிக்க நினைத்த போதிலும், இந்த செய்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே வேகமாகப் பரவி, அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெற்றி தனது வாழ்க்கைக்குப் பெரிய பாதுகாப்பையும் நிம்மதியையும் தந்துள்ளதாக ஸ்டான்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply