தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி - ஒருவர் கைது
இலங்கை
2023-2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் (telegraphic transfers) மூலம் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை கொழும்பு, மருதானை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிதி வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, FCID அதிகாரிகளால் இந்தக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்நிதியின் மூலம், பரிவர்த்தனைகளின் நோக்கம் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்ட தரப்பினர் ஆகியவற்றைத் கண்டறியும் வகையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.






















