• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (Bodu Bala Sena) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததைத் தொடர்ந்து, இன்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக்குக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
 

Leave a Reply