• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் நடைபெற்றது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமான தீச்சட்டி போராட்டம் காளி கோவிலில் நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தின் நடுவில் போராட்டத்தை குழப்பும் வகையில் ஒருவர் நடந்து கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply