மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள் - ஆட்டம் காட்டும் ஹவுதி
இலங்கை
செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோச்சா துறைமுகத்திற்கு தெற்கே கப்பல் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் உட்பட நான்கு மாலுமிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் கூறியுள்ளனர்.
தனித்தனித் தாக்குதல்
இந்நிலையில், அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.






















