• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல - துருக்கி 

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரான் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கிய ஒரு முக்கியமான படி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவுதியின் புனித நகரமான மெக்காவில் வெள்ளிக்கிழமையன்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கிய அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்" என்பது எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, அணுசக்தி நாடான பாகிஸ்தான் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தையும் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையையும் கொண்ட துருக்கி ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.

பிராந்தியத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துகிறது.

தங்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இந்த மூன்று நாடுகளும் எதிரியாகக் கருதவில்லை.

பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.

பரஸ்பர பாதுகாப்பு குறித்த இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையானது, தொழில்நுட்ப ரீதியாக நேட்டோவின் 5-வது பிரிவைப் (Article 5) போன்றது. அந்தப் பிரிவின்படி, 32 உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல் அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

இந்த நடைமுறையின்படி ​​ஒரு உறுப்பு நாடு முறையாக உதவியைக் கோர வேண்டும். மற்ற இரண்டு நாடுகளின் உதவியானது உளவுத்துறை தகவல்களைப் பகிர்வது முதல் தளவாட ஆதரவு வரை அல்லது அச்சுறுத்தலைப் பொறுத்து ராணுவப் பிரிவுகளை நிலைநிறுத்துவது வரை அமையலாம்.

இவை அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து மாறுபடும் பல அடுக்கு விஷயங்கள். எங்கள் பணிகளில் இதுவரை நாங்கள் வகுத்துள்ள கண்ணோட்டம் இதுதான்.

பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளன.

இவ்வாடி ஃபிடன் தெரிவித்தார்.

எங்களின் இயற்கையான கூட்டணி நாடான எகிப்து அடுத்த கட்டத்தில் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், அத்துடன் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் ஆகியோர் வழக்கமான குழுக்கூட்டங்களை நடத்துவார்கள். மேலும், சவுதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு செயலகத்தையும் இம்மூன்று நாடுகளும் அமைக்கும் என்று ஃபிடன் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரின்போது ஈரான் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதைய ஒப்பந்த்தின்படி சவூதி அரேபியா உதவி கேட்டால் துருக்கி செல்ல வேண்டும். இந்த நிலையில்தான் ஈரான் இலக்கு அல்ல எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply