ஞானபீட விருதை வாழ்த்துவதற்காக மட்டும் மலேசியாவிலிருந்து பறந்து வந்திருக்கிறார்
சினிமா
ஞானபீட விருதை
வாழ்த்துவதற்காக மட்டும்
மலேசியாவிலிருந்து
பறந்து வந்திருக்கிறார்
மலேசிய முன்னாள் அமைச்சரும்
இந்நாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்கள்
பொன்னாடை தந்தார்
பூட்டிக்கொண்டேன்;
முந்திரிகளால் தொடுக்கப்பட்ட
மாலை அணிவித்தார்
இது
முந்திரி மாலையா
மந்திரி மாலையா என்று
சூட்டிக்கொண்டேன்;
அவர் பரிசளித்த
வெண்ணிறப் புரவியை
ஏற்றுக்கொண்டேன்
ஞானபீட விருது விழா
ஏற்புரையில்
“இந்த விருது குதிரைக்குக்
கொடுக்கும் புல் அல்ல;
குதிரைமேல் விழுந்த
சாட்டை அடி; இன்னும்
விரைந்தோடும் என்றேனே!
அந்தக் குதிரையா
இந்தக் குதிரை" என்றேன்
குழந்தைபோல் சிரித்தார்;
கோலாலம்பூருக்கே கேட்டிருக்கும்
விருதின் சுகம்
ஒருநாள்தான்;
அன்பின் சுகம்
ஆயுள் முழுக்க
வைரமுத்து
@Vairamuthu






















