• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள்

இலங்கை

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III ) பதவிக்கான 852 வெற்றிடங்களில்,  முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.

இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும் மூன்று நேரப் பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,  நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு,  தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைச் சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply