• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது- உபகரணங்கள் நாசம்

இலங்கை

அம்பாறை இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று மாலை பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மழை பெய்யத் தொடங்கிய வேளையில் வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயைப் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும்,  வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply