புரட்சித்தலைவரின் மனிதநேயம்
சினிமா
1960 களில் தமிழ் படங்களில் No 1 கதாநாயகனாக விளங்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
ஒரு முறை பத்திரிக்கையின் பேட்டியின் போது எம்.ஜி.ஆர் பற்றிய தவறான கருத்து அதாவது குழந்தை மகபேர் காலங்களில் தாய்மார்களுக்கு அதிக பால் சுரப்பதை எம்.ஜி.ஆர் விலைக்கு வாங்கி குடிப்பார் என்று பழம்பெரும் தயாரிப்பாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிந்தோ தெரியாமலோ பேட்டி கொடுத்து விட்டார்.
மறு நாள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொதித்து எழுந்து அவர் வீட்டின் முன் ஆர்பாட்டம் செய்து அவர் காரையும் அடித்து நொருக்கி விட்டனர்.
உளவுத்துறை மூலமாக முதல்வர் அண்ணாவிற்கு தெரிய வருகிறது உடனே அவருக்கு பாதுகாப்பு அளித்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் அண்ணா
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் அறிஞர் அண்ணாவிடம் நீங்கள் கொதித்து போன எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறேன் என்று எந்த பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தீர்களோ அதே பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தால் அவர்கள் கோபம் தணியும் என்று அண்ணாவின் அறிவுரையை ஏற்றார்.
இவருக்கு தயக்கம் எம்.ஜி.ஆர் எப்படி இதை ஏற்றுக்கொள்வார் சரி முதல்வர் அண்ணா கோரிக்கையை நிறைவேற்றியதாக இருக்கட்டும் என்று
மறுநாள் தங்கத்திலே ஒரு வைரம் என்ற தலைப்போடு எம்.ஜி.ஆர் படத்துடன் தினந்தந்தி பத்திரிக்கையில் முழு பக்க விளம்பரம் வருகிறது. அதை பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வெளிநாட்டில் இருந்தும் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வாழ்க வாழ்த்துக்கள் என்று புகழ் மாலை சூட மெய்சிலிர்த்து விட்டார். என்ன ஒரு ரசிகர்கள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
பணமா பாசமா என்ற இவரது படம் அந்த காலக்கட்டத்தில் சிறந்த படமாக ரஷ்யாவில் தேர்வு செய்ய பட்டு இருந்தது அதற்காக அவருக்கு சிறப்பு விருது கொடுக்க அவரை ரஷ்யா திரை உலகம் அழைப்பு விடுத்து இருந்தது
வீனஸ் காலணியில் அவர் வீட்டிற்கு சிவாஜி முதல் மற்ற எல்லா நடிகர் நடிகைகள் அவருக்கு மாலை அணிவித்து ரஷ்யாவிற்கு வழி அனுப்பி வைத்தார்கள்.
அவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் அதில் மூன்றாவது மகன் குமார் மொட்டை மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருக்கை யில் கால் தவறி இரண்டாவது மாடியில் விழுந்து கால் எலும்பு உடைந்து பலத்த காயத்தோடு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தீவீர சிகிச்சை பகுதியில் சேர்க்கப் பட்டார்.
இந்த செய்தியை கேட்ட மக்கள் திலகம் உடனே விரைந்து சென்று குமார் மற்றும் அவரது தாயையும் பார்த்து ஆறுதல் கூறி விட்டு வெளியே வந்து டாக்டரிடம் எத்தனை லட்சம் செலவானாலும் அதை நான் தருகிறேன் எப்படியாவது பிள்ளையை காப்பாற்றி விடவேண்டும் என்று கட்டளை இட்டு சென்று விடுகிறார்
அந்த காலத்தில் லட்சம் என்பது கோடிக்கு சமம் எம்.ஜி.ஆர் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்த பையன் குமாரை காப்பாற்றி குணம் அடைய செய்கிறார்கள். மருத்துவர்கள் செலவு தொகை வெளியே தெரிய வேண்டாம் என்று அப் பணத்தை உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பி விடுகிறார் பொன்மனச்செம்மல்.
ரஷ்யாவில் இருந்து வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் ஏன் எல்லோரும் சோகமாக இருக்குறீர்கள் என்று வினாவ யாரும் வாய் திறக்கவில்லை.
பின் அவரது உதவியாளர் மூலம் விபரம் தெரிய வர மருத்துவனை சென்று தன் மகனை பார்க்காமல் இராமாவரம் சென்று எம்.ஜி.ஆர் காலை தொட்டு வணங்கி கண்ணீர் விட்டு அழுதே விட்டார் எம்.ஜி.ஆர் அவரை கட்டி பிடித்து ஆறுதல் கூறி முதலில் மகனை சென்று பாருங்கள் என்று வழி அனுப்பி வைத்தார்.
தங்கத்திலே ஒரு வைரம் படம் வெளி
வரா விட்டாலும் அவர் வாழ்க்கையில் உண்மையானது
ஒருவன் மனது ஒன்பதடா...அதில்
ஒழிந்து கிடப்பது எண்பதடா..
உருவத்தை பார்ப்பவன் மனிதடா...அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா...!
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
VR S Selvendhiran






















