• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

இலங்கை

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானம் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக குறித்த விளையாட்டு மைதானத்திற்கான தடுப்புச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சா. மதிசுமன் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் பிரதேச இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply