• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்

இலங்கை

கம்புருபிட்டிய பகுதியில் தனது மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து, உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒரு நபர், அதனால் ஏற்பட்ட இழப்பிற்கான இழப்பீடாக மின்சார சபைக்கு 201,059.90 ரூபாயைச் செலுத்துமாறு மத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 ஆம் திகதியன்று இந்த நபர் உயர் மின்னழுத்த மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறியதைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், திஹாகொட, கம்பூருபிட்டிய, அகுரெஸ்ஸ, முலட்டியானா, தெய்யந்தர, மவரல, தெனியாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

இதன் விளைவாக, அப்பகுதிகளில் இருந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.

அதனைத் தொடர்ந்து பொரிஸார் குறித்த நபரின் குடும்பத்தினரை சம்பவ இடத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அவர் கீழே இறங்கி வருமாறு சம்மதிக்க வைக்கப்பட்டார். 

இதையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரை ஆரம்பகட்டமாக ஜூலை 24-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், இந்த சம்பவத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணக்கிடுமாறு கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார். இலங்கை பயணம்

சந்தேக நபர் ஜூலை 28 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜூலை 28 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​இழப்புத் தொகை 2,00,000 ரூபாய்க்கும் அதிகம் என்று பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அத்தொகையை இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக நவம்பர் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 

Leave a Reply