முதல்வர் ஆகும் முன்பே நாட்டு நலனில் அக்கறை கொண்டவர் எம்ஜிஆர்....
சினிமா
அமரர் ராஜாஜி முதல்வர் அப்போது.
தன் நண்பர் வீரராகவன் என்பவருக்கு உதவி செய்ய சொர்ணபுரி இளவரசி என்ற நாடகத்திற்கு தலைமை தாங்க ஒப்பு கொள்கிறார் தலைவர்.
அப்போது காவல்துறை நண்பர்கள் 25 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடந்து கொண்டு இருக்க..
இந்த நாடகம் மூலம் வரும் தொகையின் ஒரு பங்கை காவல்துறை க்கு வழங்க வீரராகவன் ஏற்பாடு செய்து இருந்தார்.....
மக்கள் திலகம் நாடக நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசி நாடகம் பார்த்து பின் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து...
பின் பேசும் போது நான் கலைத்துறை சார்ந்தவன்...ஆனாலும் நாட்டை நேசிப்பவன்.
காவல்துறை நண்பர்கள் போராட்டம் அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடும்...
எனவே இனிய அந்த நண்பர்கள் என் வேண்டுகோளை ஏற்று போராட்டம் அதை கை விட வேண்டும் என்று பேசி முடிக்க...
மறுநாள் செய்தி தாள்களில் தலைவர் பேச்சு புரட்சி நடிகர் என்ற தலைப்பில் வர முதல்வர் ராஜாஜி மகிழ்ந்து போக..
அடுத்த சில மணி நேரங்களில் மறுநாள் காலை போராட்டம் விலக்கி கொள்ள பட்டது என்ற அறிவிப்பை காவல்துறை சார்ந்தோர் வெளியிட.
ஒரு நடிகரின் குரலுக்கு இவ்வளவு மரியாதை உண்டா என்று நாடே வியக்க... முதல்வர் ராஜாஜி அவர்களும் வியக்க.....
அவர்தான் நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் அதிமுக நிறுவன தலைவர்
எம்ஜிஆர் ஆவார்.
இன்று நாட்டில் கொட்டி கிடக்கும் நிறைய தீர்க்க முடியாத நிலையில் உள்ள அதை தீர்க்க இன்று இருக்கும் உச்ச நடிகர்கள் குரல் கொடுத்து தீர்க்க முடிந்தால்.....அதை வரவேற்போம்...
அடக்கத்துடன் அகில உலக எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில்
உங்களில் ஒருவன்
நெல்லை மணி
பின்னால் அந்த காவல்துறை சார்ந்த அனைவருக்கும் முழு உடை கொடுத்து அழகு பார்த்தவர் நம் முதல்வர் எம்ஜிஆர்....
முதல்வர் ஆகும் முன்பே நாட்டு நலனில் அக்கறை கொண்டவர் அதான்
மையகருத்து...
உங்களில் ஒருவன்
நெல்லை மணி...






















