• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் திரை உலக பிரச்சனை - முதலமைச்சர் விஜய் மூலம் விடிவு காலம் வரும் -இயக்குனர் சேரன்

சினிமா

இந்த துறையை புரிந்து கொண்ட ஒருத்தர் எங்களுக்கு அமைச்சரா கிடைச்சது அதை முதலமைச்சர் கொடுத்ததுக்கு உண்மையிலேயே பெரிய ஹாட்ஸ் ஆப் சல்யூட் ஏன்னா அவங்க தான் இதை தீர்க்க முடியும் என்றார்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் யுவராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், இயக்குனர்கள் சேரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சிவா, சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ரவி மரியா, அர்ஜூன்தாஸ், அசோக் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் இயக்குனர் சேரன் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு வேண்டுகோள், திரைத்துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. நீங்க பார்க்கும்போது நாங்க எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா தனியா வீட்டுக்கு போய் உட்கார்ந்தா ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு யோசனையில் முழுகிக்கிட்டு இருப்போம். ஒரு திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் அதை எடுத்து ரிலீஸ் பண்றதுக்கு ஆயிரம் தடைகளும் பிரச்சனைகளும் இருக்கு. ஒரு படத்தை எடுத்த இயக்குனர் அந்த படத்தை முடிப்பதற்குள் நிறைய பிரச்சனைகள்

இந்த துறையை புரிந்து கொண்ட ஒருத்தர் எங்களுக்கு அமைச்சரா கிடைச்சது அதை முதலமைச்சர் கொடுத்ததுக்கு உண்மையிலேயே பெரிய ஹாட்ஸ் ஆப் சல்யூட் ஏன்னா அவங்க தான் இதை தீர்க்க முடியும். நாங்க இதுக்கு முன்னாடி எத்தனையோ ஆட்சிகள்ல நாங்க எங்களோட கோரிக்கைகளை வச்சிருக்கோம். சிலது நிறைவேற்றி இருக்காங்க. நிறைய நிறைவேற்ற முடியல.

ஏன்னா அதுக்கு அவங்க பக்குவமா உட்கார்ந்து பேசல. எங்க எல்லாரோட விஷயத்தையும் தெரிஞ்ச ஒரு முதலமைச்சர் இப்போது உட்கார்ந்திருக்கார். அவர் மூலமாதான் எங்களுக்கு இதுல விடிவு காலம் வரும்னு நாங்க நம்புறோம். ஒரு சாதாரண இயக்குனரா நான் அதை உங்களிடம் முன் வைக்கிறேன் என்றார். 

Leave a Reply