எம்ஜிஆர் சிவாஜி வசனங்கள்
சினிமா
அன்பே வா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் டி.ஆர். ராமச்சந்திரனைப் பார்த்து நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு டி.ஆர். ராமச்சந்திரன் தயங்கியபடியே "புண்ணாக்கு வியாபாரம்" என்று பதிலளிப்பார். எம் ஜி ஆர் அப்படியா என்பார். டி.ஆர். ராமச்சந்திரன் "தம்பி இதைக் கேட்ட உடன் எல்லோரும் சிரிப்பார்கள். நீங்கள் ஒருவர்தான் சிரிக்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்லுவார். அதற்கு புரட்சித்தலைவர் " ஒரு வியாபாரியின் திறமைதான் முக்கியமே தவிர அவன் என்ன பொருள் விற்கிறான் என்பது முக்கியமல்ல " என்று திறமையின் உயர்வு குறித்து அழகாக, இயல்பாகச் சொல்லுவார்.
அது போல் நம்நாடு திரைப்படத்தில் வில்லன்களிடம் ஏழைகளுக்காக பேசி விட்டு வீடு திரும்பும் போது அவருடைய அண்ணன் பாத்திரத்தில் நடித்த டி.கே.பகவதி வில்லன்களின் உண்மை குணம் அறியாமல் எங்கே போய் வருகிறாய் என்று கோபமாய்க் கேட்பார். அதற்கு புரட்சித்தலைவர் " சில ஊமைகளுக்காக சில செவிடர்களிடம் பேசி விட்டு வருகிறேன்" என்று அமைதியாகச் சொல்லுவார்.
ரிக்சாக்காரன் படத்தில் புரட்சித்தலைவர் மேல் பொய்யான வழக்கொன்றைப் போட்டு விடுவார்கள். தன் பக்கத்து நியாயங்களை உண்மைகளை புரட்சித்தலைவர் சொல்லி விடுவார். வில்லன்களின் வக்கீல் பொய் சாட்சிகளை வைத்து புனைந்து பொய்யான செய்திகளை சொல்லி புரட்சித்தலைவர் மேல் பழிகளைப் போடுவார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரும்ப புரட்சித்தலைவரிடம் வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்பார். அதற்கு அவர் அமைதியாக இயல்பாக "அய்யா, நடந்ததை நான் சொல்லி விட்டேன். நடக்காததையெல்லாம் வக்கீல் அய்யா சொன்னார். இனி நடக்க வேண்டியதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் " என்று அழகாகச் சொல்லுவார்
இன்னும் நிறைய சொல்லலாம். மேலே சொன்னவை சாம்பிளுக்காக.
நடிகர் திலகத்தின் பலமே அவர் பேசிய வசனங்கள்தாமே. நடிப்பின் சிகரமன்றோ அந்த கலைக்குரிசில்.
பராசக்தி தொடங்கி மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன்,கர்ணன் என்று எண்ணிலடங்கா திரைப்படங்களின் பல உரையாடல்கள் உலகத் தமிழர் நெஞ்சிருக்கும் வரை நினைவில் வாழுமே.
கர்ணன் படத்தில் ஓ.ஏ.கே.தேவர் கர்ணனின் குலப்பிறப்பை இழிவாகப் பேசுவார். அதற்கு பதிலாக எந்த வசனமும் பேசாமல் ஒரு சிம்ம கர்ஜனை புரிந்து விட்டுப் போவார். ஆயிரம் வசனங்கள் கூட இணையாகாது.
இன்னும் பக்கம் பக்கமாக சொல்லிக் கொண்டே போகலாம் அந்த வரலாற்று நாயகர்களைப் பற்றி.
இவர்களின் பிரபலமான வசனங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.
Kalimuthu Raj






















