• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குறுகிய காலத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த படம்..

சினிமா

1966 செப் 18 ல் வெளியாகி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர், தேவர் பிலிம்ஸ் கூட்டணியின் பதினொன்றாம் படமான தனிப்பிறவி.பாடல்கள் அத்தனையும் நவீன இசையமைப்பில் கவர்ச்சியான மெட்டுக்களில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம். தேவரின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான படம். 

தலைவரின் மறுபிறவிக்கு முன் வெளியான வெற்றிப்படம்தான் தனிப்பிறவி. அடுத்தடுத்து வெளியான தலைவரின் வெற்றிப்படங்களான "பறக்கும் பாவை" "பெற்றால் தான் பிள்ளையா" இரண்டு வெற்றிப் படங்களையும் தாண்டி முக்கிய நகரங்களில்  75 நாட்கள் வரை ஓடி  A B சென்டர்களில்  பல ஆண்டுகள் தொடர் வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம்.  உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தலைவர் ரசிகர்கள் விரும்பி பார்த்த படம். 

பாமர மக்களிடையே 'கன்னத்தில் என்னடி காயம்?' பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. "தனிப்பிறவி" படத்தின் பெயரில் விற்ற புடவை, வளையல்  அந்தக்காலத்தில் மிகுந்த  வரவேற்பை பெற்றது.  சென்னையில் "பறக்கும் பாவை" வெளியாகும் வரை (அதாவது தீபாவளி வரை)  54 நாட்கள் ஓடியது. திருநெல்வேலி பார்வதியில் வெளியாகி 50 நாட்களை தாண்டி மாட்னி காட்சியுடன் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 

மாற்று நடிகரின்  வெற்றிப்படம் என்று சொல்லும் "கலாட்டா கல்யாணம்" இங்கு ஓடியது வெறும் 13 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  அது தெரிந்தால்தான் "தனிப்பிறவி"யின் வெற்றி எவ்வளவு தன்னிகரற்றது என்பது புரியும். நெல்லையில் அவர்களின் அநேக படங்கள் 4 வாரத்தை தாண்டியதில்லை. "தனிப்பிறவி"  50 நாட்கள் தாண்டியதை முன்னிட்டு ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து மகிழ்ந்தார்கள். 

தீபாவளி குறுக்கீட்டால் நெல்லை பார்வதியின் படம் 54 நாட்களில் எடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் செப் 18 ல் வெளியாகவில்லை. அக் 9 ல் வெளியாகி 33 நாட்கள் தீபாவளி வரை ஓடி தொடர்ந்து "பறக்கும்பாவை" வெளியாகி 28 நாட்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து "பெற்றால் தான் பிள்ளையா" வெளியாகி 36 நாட்கள் பொங்கல் வரை தொடர்ந்தது. 1966 ல் தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில்  தலைவர் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு மகசூலை பெருக்கினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

நன்றி.. நடிக்கப் பேரரசர்... 

Leave a Reply