ஹனே மகே தெய்யோ என கூறியபடியே புரட்சித்தலைவர் காலில் விழுந்த சிங்கள இளைஞர்
சினிமா
மிகச்சரியாக 52-ஆண்டுகளுக்கு முன்பு.... இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில் 'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ராமச்சந்திரனையும்,
பி.சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.
23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு. அன்று தீபாவளி பண்டிகை. கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது. கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.
எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.
சிறிது நேரத்தில்....
வின்னில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....
ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...
திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.
பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரோஜதேவி...
அவர் பயணம் மேற்கொள்ளும் வழியான 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது...
அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய பிரதமர் 'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.
எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம் எதுவாக இருந்தாலும்.. அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.
விழா நடக்கும் 'நுவரெலியா'விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான். இங்கிருந்து மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.
விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள். அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை.
விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் எம்ஜிஆர் அவர்களும், சரோஜாதேவி அவர்களும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது. அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.
அம்மேடையில் தான் M.G.R. அவர்களுக்கு "#நிருத்திய_சக்ரவர்த்தி" என
('நிருத்திய' என்றால் 'அள்ளிக்குவிக்கின்ற' என்ற பொருள்)
விழா நிறைவில் பைனாகுலர் மூலமாக அங்கு திரட்டிருந்த கூட்டத்தை பார்த்த #மக்கள்_திலகம்....
தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.
மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
"ஹனே மகே தெய்யோ" என்று கூற..
அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...
பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.
"அந்த முடமான அன்பு சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம். மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்" என்கிறார் சுப்பையா இராஜசேகரன்.
இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்களின் திலகமாக
#நேற்று மட்டுமல்ல..
#இன்று-ம்... ஏன்
#நாளை-யும்...
அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
#வாழ்ந்தார்...
#வாழ்கிறார்....
#வாழ்வார்..
பா.வே. முத்தமிழன்























