• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுரேஷ் சாலேயின் மனு ஒத்திவைப்பு

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 25 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதிபதி ரோகந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உண்மைகளை மேலும் உறுதி செய்வதற்காக, இந்த மனுவை ஆகஸ்ட் 25 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அமர்வு உத்தரவிட்டது.

மனு தொடர்பான மேலதிக ஆதாரங்கள் அன்று சமர்ப்பிக்கப்பட உள்ளன.
 

Leave a Reply