ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து
இலங்கை
இந்திய இலக்கியத் துறையின் மிக உயரிய விருதான 'ஞானபீட விருதை' வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான 'வைரமுத்துவுக்கு', மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் 60-வது ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் 3-வது தமிழ் எழுத்தாளர் இவர் ஆவார்.
இதற்கு முன் இந்த விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வசன நடை/நாவல்களுக்காகப் பெற்ற நிலையில், தமிழ் கவிதைக்காக ஞானபீட விருது பெறப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமாக அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்கும்.
வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும், இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், அவருக்குப் பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.






















