• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்

இலங்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ‘டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று சம்மாந்துறையில்

இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில்நடைபெற்றதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு

இச்செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

டெங்கு நோயற்ற ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே இச்செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன்கீழ் சுற்றுச்சூழல் தூய்மை டெங்கு பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வு

மற்றும் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோயை ஒழித்து சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாக இச்செயற்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை மற்றும் அப்துல் வாசித் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் ஹாசிம்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் கட்சியின் ம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷாரப் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply