பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்
இலங்கை
பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை ஆண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் வடக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள ஆய்வை மேற்கொண்டோம்.
இந்தப் பகுதி இயற்கை எழில் கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால்இ வடக்கு மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இதனை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்இ பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.
இன்றைய கள ஆய்வின் போது வடக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் மற்றும் தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வட மாகாண சுற்றுலா துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன் விரைவில் யாழ்ப்பாணம் வரவுள்ள சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் நேரடியாக முனை பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவரது ஆலோசனைப்படி முனை பகுதியில் அதிக மக்கள கூடும் இடங்களான முனை வெளிச்சவீடு என்பன விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்





















