பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
ஐ.டி.எச். – கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















