• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

இலங்கை

புத்தளம் – கொழும்புக்கு இடையே இயக்கப்படும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.

கொழும்பு – புத்தளம் வழித்தடத்தில் நீண்ட தூரப் பேருந்துப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், காவல்துறையோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணையமோ (NTC) இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவங்கள் ஜூலை 20, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் சிலாபம் மற்றும் முந்தல் பகுதிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
 

Leave a Reply