இந்திய யாத்திரை விசா - இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கை
இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைவிடுதிகள்
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்க வேண்டும் எனபதை நாம் எமது நிலையான கொள்கையாக கொண்டிருக்கின்றோம்.
அத்துடன் உலகம் முழுவதும் காண்படும், இலங்கை உற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் தாம் இந்தியாவிற்கு பயணிப்பதற்கு இ-விசா வசதியினை பயன்படுத்திகொள்ளும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழழில் உயர்ஸ்தானிகராலயத்தில் விசவுக்காக விண்ணப்பிக்க விரும்புபவர் தமது விண்ணப்பங்களை இணையம் மூலமாக நிரப்பி அவற்றினை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள இந்திய கோன்சியலர் சேவை விண்ணப்ப மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.
இந்நிலையில் இந்தியாவிற்கு புனித பெளத்த யாத்திரை தலங்கள் உட்பட யாத்திரைகளுக்காக பயணிக்கும் இலங்கையர்களுக்கான விசாக்கள் இலகுவாகவும் துரிதமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழுக்களாக யாத்திரைகளை மேற்கொள்பவர்களுக்கான விண்ணப்பங்களை பத்திரசாசன, சமய மற்றும் கலாசார அலுவலகள் அமைச்சு உறுதிப்படுத்தும் நிலையில் அவ்வாறான விண்ணப்பதாரர்களுக்கான விசாக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சேவையை வழங்கும் முன்னாள் தரப்பு சேவை வழங்குனரில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து இந்த செயற்பாடு தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியசுற்றுலா
இந்நிலையில் 2026 ஜூலை 7ஆம் திகதி முதல் புதிய சேவை வழங்குநர் தமது பணிகளை ஆரம்பித்திருக்கும் நிலையில் இலங்கையச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கான விசாவை இலவசமாக வழங்கும் முறையை மீள அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் காணப்பட்ட நடைமுறையை போலவே இவ்வாரான விண்ணப்பங்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இவ்வாறான யாத்திரிகர்களுக்கான விசாக்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழுக்களாக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுவதடன் அவர்கள் குழுக்களாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ ICAC விசா விண்ணப்ப நிலையத்திற்கு தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பதற்காக வருகைதர வேண்டும்.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் இது அத்தியாவசியமான ஒரு தேவையாகும்.
இருந்த போதிலும் 12 வயது முதல் 70 வயது வையான விண்ணப்பதாரிகளோ இவ்வாறான உயிரியல் அடையாளங்களை வழங்க வேண்டிய தேவை உடையவர்கள் ஆவர்.
இந்நிலையில் ICAC நிலையங்களுக்கு தமது உயிரியல் அடையாளங்களை வழங்குவதற்காக வருகைதரும் ஏனைய சிரேஷ்ட பிரஜைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களது காத்திருப்பு நேரத்தை சாந்தியமான அளவில் குறைப்பதற்காக விசட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்குள் அவர்கள் பிரவேசிக்கும் நிலையில் இந்திய குடிவரவு நடைமுறைகளை அவர்கள் இலகுவாகவும் சுமுகமாகவும் முகம் கொடுப்பதை கவனத்தில் கொண்டு இவ்வாறான உயிரியல் அடையாளங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்தியசுற்றுலா
மேலே கூறப்பட்ட வகையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவிதமான விசா கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டண மாற்றம் தொடர்பாக எந்தவிதமான கேள்வியும் இல்லை.
இருந்த போதிலும் ICAC சேவை கட்டணமாக விண்ணப்பதாரிகள் இலங்கை ரூபா 1855/- ஐ விசா சேவை கட்டணமாக செலுத்த வேண்டிய தேவை உள்ளது – என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைவிடுதிகள்





















