அடுத்து நோபல் பரிசே உங்கள் இலக்கு என்று பரவலாகப் பேச்சிருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சினிமா
கவிப்பேரரசு :
அது அத்துணை எளிதல்ல!
ஞானபீடம் தமிழ் மொழியை ஒதுக்கி வந்திருக்கிறது என்று சொல்லப்படுவது போல, நோபல் பரிசுக் குழு ஆசியாவை ஒதுக்கி வருகிறது.
அது வெள்ளை நிறத்தையே பெரிதும்
கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
அதிலும் அமெரிக்க வெள்ளையா
ஐரோப்பிய வெள்ளையா என்பதில் போட்டி இருக்கிறது.
ஏழு கடலையும் ஏழு மலையையும் கடந்து பூப்பறிக்கிற கதை அது. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் படைப்புகள் நோபல் பரிசின் தரத்திற்குக் குறைந்தவை அல்ல.
எனது "கள்ளிக்காட்டு இதிகாசம் "
ஒன்று போதும் உலக இலக்கியத்தின் எல்லா அளவுகோலையும் தாண்டி நிற்கும்.
இந்தியப் பல்கலைக் கழகங்கள்
இதை உலகத்திற்கு உயர்த்திக் காட்ட வேண்டும். மாட்டார்கள். அதில் அரசியல், மொழி, இனம், நிறம், தேசம் என்ற இருட்டுச் சுவர்கள் இருக்கின்றன. பார்ப்போம்.
- குமுதம் இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து






















