கலாநிதி வைகுந்தவாசனுக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு
இலங்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை வழங்கியுள்ளது.
முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சாதனா வைகுந்தவாசனையே பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று, துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சாதனா வைகுந்தவாசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சாதனா வைகுந்தவாசன் சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.





















