6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இலங்கை
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின் கல்லாறு பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த குற்றச் செயல் தடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 9.30 மணியளவில் சந்தேக நபர்களால் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளை மீட்டனர்
தொடர்ந்து மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிசார் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தகவல்கள் தெரிவித்துள்ளனர்






















