கனடாவில் மாயமான 11 வயது சிறுவனை தேடும் பணி ஏழாவது நாளாகவும் தீவிரம்
கனடா
கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
கால்கரியின் வடமேற்கு பகுதியில் உள்ள Connaught Drive N.W.-இல் அமைந்திருந்த தனது சிறுவர் பராமரிப்பு மையத்திலிருந்து பார்கர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கால்கரி காவல்துறை, கண்காணிப்பு கமெரா பதிவுகளின் அடிப்படையில் பார்கர் சென்றதாக உறுதிப்படுத்தப்பட்ட பாதையை காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டது. தேடுதலை கைவிடவில்லை.
இது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய துயரமான கனவாகும். இந்த கடினமான நேரத்தில் பார்கரின் குடும்பத்துடன் எங்கள் மனமும் இணைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 400-க்கும் மேற்பட்ட கால்கரி காவல்துறை அதிகாரிகளும், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 5,500 மணிநேரத்திற்கும் அதிகமான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தகவலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை, தனியார் வீடுகளில் அனுமதியின்றி நுழைந்து தேடுதல் நடத்தவோ, அங்குள்ள மக்களை எதிர்கொள்ளவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்கவோ கூடாது என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ தேடுதல் பணிகளை பாதிப்பதுடன், சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















