• Welcome to TamilsGuide
செய்திகள் 1

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு

இலங்கை

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி பிளாசாவில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ‘வலன’ (Walana) குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது நவீன ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மொபைல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

Leave a Reply