மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சிறப்பு நூல் - சிறப்புத் தள்ளுபடியுடன்!
சினிமா
என்றும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருந்தாலும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பேரனான முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து அளித்திருக்கிற ‘எம்.ஜி.ஆர்.’ என்கிற நூல் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரு விழாவில் வெளியிடப்பட்டது.
சுமார் 800 பக்கங்களில், முழுக்க உயர்தர வண்ண காகிதத்தில் நூற்றுக்கணக்கான அபூர்வ புகைப்படங்கள், எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த வெவ்வேறு அரசியல் நிகழ்வுகள், பலர் அவரைப் பற்றி நெகிழ்வுடன் குறிப்பிட்டிருக்கிற பல்வேறு சம்பவங்கள் இவற்றுடன் எம்.ஜி.ஆர் நடித்த அனைத்து திரைப்படங்களின் புகைப்படங்களும் இதில் வண்ணமயமாக தொகுக்கப்பட்டிருப்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு.
இந்த நூலை அடுத்து, முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து உருவாக்கிய இன்னொரு நூல் ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.’ என்கிற 550 பக்கங்கள் அடங்கிய இன்னொரு வண்ணமயமான சிறப்பு நூல்.
மெரினா புக்ஸ் வெளியிட்ட இந்த இரு நூல்களும் சிறப்புத் தள்ளுபடியுடன் சென்னை, ஆற்காடு தெருவில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் தொண்டர்களுக்கு இந்த இரு நூல்களும் அரிய பொக்கிஷம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -
18, ஆற்காடு தெரு, தி.நகர், சென்னை - 600017
98416 87204





















