வெளிநாடு சுற்றுலா சென்ற கனேடியருக்கு நேர்ந்த துயர முடிவு
இலங்கை
வெளிநாடு சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர், எதிர்பாராத வகையில் துயர முடிவை சந்தித்துள்ளார்.
69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலாத்தலத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு, வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருக்க, இந்த கனேடியர் அவரிடம் சென்று, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்று கேட்டுள்ளார்.
அந்த வழிகாட்டி அந்த துப்பாக்கி உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக, அதை எப்படி இயக்குவது என்று அந்த கனேடியருக்கு செய்துகாட்ட, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அந்த கனேடியர். பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், கனேடிய அதிகாரிகளுக்கு அந்த துயர சம்பவம் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.





















