மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
சுத்திகரிப்பு ஆலை மீது ஒரு வாரத்தில் 2ஆவது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன.
ரஷ்யா படையெடுத்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், நடந்த மிக பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும் என்று ரஷ்ய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இதேபோன்று, மாஸ்கோவை நோக்கி நள்ளிரவில் தாக்க வந்த 200 ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
எனினும், பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் 555 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.





















