• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல் - சந்தேக நபர் கைது

இலங்கை

சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு இருந்த உரிமையாளரிடன் கப்பல் கோரி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2026.06.09 அன்று மதவாச்சி பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகை அலங்கார (சலூன்) நிலையத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கு இருந்த உரிமையாளரிடம் பணம் கேட்டு தாக்குதல் நடத்தும் காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டன. 

இதுதொடர்பாக 2026.06.10 அன்று மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த காணொளிக் காட்சிகள் தொடர்பாக மதவாச்சி  பொலிசார் விசாரணை மேற்கொண்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 2026.06.17 அன்று மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டார். 

மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 29 வயதுடைய மதவச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.

மேற்கண்ட தாக்குதல் கப்பம் பெறும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும், சந்தேக நபருக்கும் வணிக நிலைய உரிமையாளருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 

Leave a Reply