• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு

இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் நேற்று(16) வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை காசோலைகள் கையளிக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் ரி.பி.சரத் முதற்கட்டமாக 4 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

சுமார் 827 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு தெரிவாகியுள்ள குடும்பங்களிற்கு சுமார் 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

பகுதி பகுதியாக வழங்கப்படவுள்ள இந்நிதியில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தமது வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ரஜீபன் ஜெயசந்திரமூர்த்தி, மேலதிக அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply