யாழில் கைக்குண்டு ஒன்று மீட்பு
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கைக்குண்டினை மீட்பதற்கான பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.























