• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச அன்னையர், தந்தையர் குடும்ப தின பெற்றோர் கௌரவிப்பும் விழிப்புணர்வு கதம்ப விழா

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கிற்கான "இலங்கை பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையமும்" தேசிய ரீதியில் இயங்கிவரும் கண்ணகி கலாலயம்  கலை, கலாச்சார, சமூக சேவை கலைஞர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச அன்னையர், தந்தையர் குடும்ப தின பெற்றோர் கௌரவிப்பும் விழிப்புணர்வு கதம்ப விழா நிகழ்வும் - 2026 க்கான வைபவம் வெகு சிறப்பாக  யாழ்ப்பாண கல்லூரி இளங்கலை மண்டபத்தில் கடந்த ஜீன் 5ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஊடக அனுசரணையை Tamils guide வழங்கியிருந்தது.

விழிபுலன் அற்றவர்கள் தங்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கல்வியை மேற்கொள்ள உதவித்தொகையும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழிபுலன் அற்றவர்களை கொண்டு சமூகத்தில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனயே இம்முறை "கண்ணகி கலாலயம்" தலைவர் பல்துறைக் கலைஞரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் இயக்குனர் சபையின் உறுப்பினருமான A. K இளங்கோ இந்நிகழ்வை வடிவமைத்திருந்தார்.

பிரதம அதிதியாக சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவரும் சமூக நல்லிணக்க செயற்பாட்டாளருமாகிய சார்ல்ஸ் பிரதீப் கலந்துக்கொண்டதுடன் விஷேட அதிதியாக யாழ் மாவட்ட செயலக  அரச மேலதிக அதிபர் சிவகரனும்

சிறப்பு விருந்தினர்களாக யாழ் விஷேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரி சமில மாரப்பன
யாழ் விஷேட தாதிமாருக்கான அசிரியர் நெவில் சிறி தசநாயக்க, இளம் சைவ புலவர்  (கண்ணகி) சாந்தி ஆனந்த கிருஷ்ணனும் கௌரவ அதிதிகளாக யாழ் மண்ணின் மைந்தன் பல்துறைக் கலைஞர் ஜெராட் நோயல் தேச பந்து லங்கா புத்ர கண்ணகி கலாலயம் செயலாளர் எஸ். முத்துக்குமார் பொருளாளர் M. F. M நசார், வடக்கு கிழக்கிற்கான இலங்கை பார்வையற்றோர் அறங்கட்டளை  சங்கத் தலைவர், தேசபந்து லங்கா புத்ர து. ஸ்ரீ. ஜெயராஜா என பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பார்வையற்றோர் கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டதுடன் கலை நிகழ்ச்சிகள் பலவும் கதம்பமாலையாக இடம் பெற்றது.

வரவேற்பு நடனத்தை செல்வி கலைநிலா இளங்கோ வழங்கியதுடன், தந்தைக்கான ஓர் பாடலில் தமிழ் பிரியன் இளங்கோ தனது தந்தையாருடன் தோன்றி அபிநயம் செய்திருந்தார்.

குறிப்பாக நெடுந்தீவு மண்ணின் மைந்தன் புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வாழும் கவிஞரும். பாடலாசிரியருமாகிய. பசுவூர்க்கோபி. (ஐயாக்குட்டி கோவிந்தநாதன்) புலம்பெயர்ந்தாலும். மண்வாசனை கவிதைகளும் சமுதாய சிந்தனையுள்ள கவிதைகளும் தொடர்ந்து எழுதிவருகின்றதோடு “வெண்பனித்தூறல்”என்னும் கவிதைநூலை வெளியிட்டும் உள்ளார். வாலி அறக்கட்டளை விருது. நெதர்லாந்து வலையொளித்தள விருது. கண்ணதாசன் விருது போன்ற விருதுக்கும் சொந்தக்காரரான இவருக்கான சிறப்பு விருதும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. 

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இது ஓர் சிறந்த படிப்பினையாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கவிதா இளங்கோ.

Leave a Reply