• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் - பெட்ரோல் பங்கில் மக்கள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி 

இஸ்ரேலில் பெட்ரோல் பங்கில் நேற்று மதியம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மத்திய இஸ்ரேலின் கொசாவ் யாஹிர் நகரில் நேற்று சம்பவம் நடப்பதற்கு முன் அந்த பெட்ரோல் பங்க் பலர் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கூடியிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த இருவர், அங்கு நின்றிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்கள் அவ்விடத்திற்கு அருகாமையில் உள்ள உள்ள பகுதிகளிலும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவரை சுட்டுக்கொன்றனர். மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் இஸ்ரேலின் டயிபி பகுதியில் வசிக்கும் உமர் யாசின் என அடையாலம் காணப்பட்டுள்ளார். 
 

Leave a Reply