அள்ளிக் கொடுத்த எம்.ஜி.ஆர், அழுதுகொண்டு வாங்கிய வசன கர்த்தா - அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்
சினிமா
எம்.ஜி.ஆரும் வில்லன் நம்பியாரும் பேசிக் கொண்டிருக்கும் போது ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி முத்திரை பதித்த எம்.ஜி.ஆர் சினிமா துறையில் இருந்தவரை அவரது படங்கள் மட்டும் இல்லாமல் தலைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருந்துள்ளது, குறிப்பாக இவரது டைட்டில்கள், பாசிட்டீவ் எனர்ஜியை கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் டைட்டில் கிடைத்தது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1965-ம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படம் அந்த நேரத்தில் பெரும் வெற்றியை பெற்றது. 'ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் அனைத்தும் இன்றும் மக்கள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. எம்.ஜி.ஆரும் வில்லன் நம்பியாரும் பேசிக் கொண்டிருக்கும் போது ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
49 ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டு இப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் வசனம் எழுதிய வசனக்கர்த்தா ஆர்.கே.சண்முகம் இயக்குநர் பி.ஆர். பந்தலுவிடம் உதவியாளராக பணியாற்றியவர். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து, 'முகராசி', 'தனிப்பிறவி', 'ரகசிய போலீஸ் 115', 'ரிக்ஷாக்காரன்', என பல்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
இந்நிலையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தொடங்குவதற்கு முன்பாக இந்த படத்தின் கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பலரிடம் கேட்டுள்ளார். அப்போது வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் ஆயிரத்தில் ஒருவன என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் உடனடியாக அவருக்கு பரிசு கொடுக்க அவர்,
இது குறித்து பேசிய பேராசிரியர் ஞானசம்மந்தம், பி.ஆ.பந்தலு ‘கர்ணன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற படங்களை எடுத்தவர். எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என அவர் திட்டமிட்டார். இந்த படத்திற்கு ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார். அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார்கள். படத்திற்கான கதை சொல்லி முடித்த பிறகு, எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை கேட்டுள்ளார். அதற்கு வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் "ஆயிரத்தில் ஒருவன்" என்று தலைப்பு சொல்லியுள்ளார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் அவருக்கு 1001 ரூபாய் பரிசாக அளித்துள்ளார்.. அதை வாங்கியதும், வசனகர்த்தா தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
அப்போது ஏன் அழுகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்டதற்கு, சொன்னது தான் சொன்னேன், லட்சத்தில் ஒருவன் என்று சொல்லி இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருப்பீங்களே என்று கூறியுள்ளார். இதை கேட்டு எம்.ஜி.ஆர் ஆச்சரியத்தில் சிரித்ததாக பேராசிரியர் ஞானசம்மந்தம் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தமிழச்சி கயல்விழி






















