• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல கப்பல்கள் செல்ல தடையில்லை - ஈரான்

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல கப்பல்கள் செல்ல தடையில்லை என ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் இன்று நடந்தது. இதில் அந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி ஊடகத்திற்கு இன்று அளித்த பேட்டியின்போது, ஹோர்மூஸ் நீரினையானது, அமெரிக்க ஆக்கிரமிப்பால், அதன் முற்றுகையால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

எங்களுடைய பார்வையில், ஹோர்மூஸ் நீரினை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகவும் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் எங்களுடைய கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் எந்த தடையையும் உருவாக்கவில்லை. அமெரிக்காவின் முற்றுகையால் அது உருவானது. அமெரிக்காவால் உருவான இந்த தடுப்பு நடவடிக்கைகளை நீக்கினால், இந்த சிக்கலான நிலைமை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
 

Leave a Reply