இன்று திரையரங்குகளில் வெளியாகிறது கருப்பு
சினிமா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கருப்பு'. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் நேற்று உலகமெங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்து.
அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு (காலை 9 மணி) அரசிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது.
ரிலீசுக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதுடன் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனை தொடர்ந்து, படம் வெளியாகாதது குறித்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கருப்பு திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக நேற்று திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில், இன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, சிறப்பு காட்சியுடன் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் வெளியாகிறது.






















