பிரபல ஹொலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார்
பிரபல ஹொலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா தனது 71ஆவது வயதில் காலமானார்.
"ஹோம் அலோன்" (Home Alone) மற்றும் "ஷிட்ஸ் கிரீக்" (Schitt’s Creek) போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளில் நடித்து முத்திரை பதித்த அமெரிக்க நடிகை சுகயீனம் காரணமாக நேற்று (30) அவரது வீட்டில் வைத்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1990களில் வெளியான 'Home Alone' திரைப்படத்தில் சிறுவன் கெவினின் தாயாராக நடித்ததன் மூலம் இவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தார்.
அண்மைக் காலத்தில் 'Schitt’s Creek' தொடரில் மோய்ரா ரோஸ் (Moira Rose) என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எம்மி விருது (Emmy Award) மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார்.























