• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனா சென்ற இங்கிலாந்து பிரதமர் - எதிர்க்கும் ட்ரம்ப்

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதி  ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் மனைவி மெலனியாவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் சிறப்புக் காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது என்றார்.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, "இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல. சீனா உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் ஆகும். ஹாங்காங்குடன் சேர்த்து, சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது.

எனது பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளுக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பல வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளோம்" என்றார்.  
 

Leave a Reply