உள்ளாடை அணிந்து வா, உன் உடலை பார்க்க வேண்டும்- போட்டோ சூட் என்ற பெயரில் ஐஸ்வர்யா ராஜேசிடம் அத்துமீறல்
சினிமா
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறிய வயது காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் அவர் கூறியதாவது:-
நான் சினிமாவுக்கு வரும் முன், மிக சின்ன வயதில் நடந்த சம்பவம் இது. நான் எப்போதும் இதனை மறக்கவே மாட்டேன். போட்டோ ஷூட் என அழைத்தார். நான் என் சகோதரருடன் சென்றேன். அவரை வெளியே அமர சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார்.
உள்ளாடைகளை கொடுத்து, இதனை அணிந்து கொள், உன் உடலை நான் பார்க்க வேண்டும் என சொன்னார். எனக்கு என்னவென்றே புரியவில்லை. நான் மிகவும் சின்ன பிள்ளை அப்போது.
இங்கு எல்லாம் இப்படித்தான் நடக்குமோ என நான்கூட யோசிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்களும் இதை அணிந்ததும் எப்படி போட்டோ எடுக்கலாம் என பேச ஆரம்பித்தார்கள். இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன்.
ஆனால் ஏதோ தப்பாக நடக்கிறது என நான் உணர்ந்ததும், என் சகோதரனிடம் அனுமதி கேட்க வேண்டும் என சொல்லி, அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதே போல அவர்கள் இன்னும் எத்தனை பெண்களுக்கு செய்திருப்பார்கள். என்னால் அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை. திரை உலகில் இயக்குநர் ஒருவர் நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததாக திட்டினார். திட்டியதால் பிரச்சனை இல்லை. என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனை. நான் என்ன தவறு செய்திருந்தாலும் பொதுவில் திட்டுவது சரியல்ல என்றார்.






















