• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

இலங்கை

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய  பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்  செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் இன்று ஆரம்பித்து வைத்தனர்.

இந்த வீதி அபிவிருத்தி திட்டத்தில் கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள சின்ன உப்போடை வாவிக்கரை வீதி 141.89 மில்லியன் செலவில் புனரமைக்கபடவுள்ள வீதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான செல்லப்பெருமாள் வனிதா தலைமையில் இடம்பெற்றது

இதில் பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களுக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்  செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபையின் உறுப்பினர்களான முத்துலிங்கம் துதீஸ்வரன், செல்லப்பெருமாள் வணிதா, மொகமட் லத்தீப், செல்வி.தயாள குமார் கௌரி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் செல்வராசா, ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியை பார்வையிட்டுள்ளமை குறுப்பிடதக்கது.
 

Leave a Reply