• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 06 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பலங்கொட கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, இரத்தப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply