• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் பாராளுமன்ற முதல்வராக யாழ்ப்பாண தமிழர்

கனடா

சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிட்ஸ‌ர்லாந்து வந்த புலம்பெயர் தமிழராவார்.

இன்று, செங்காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ணமிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

செங்காளன் நகர மக்களில் சுமார் 30% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார். இனப் பாகுபாடு, சமூக புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறார்.

அவர் இதை ஒரு சவாலாக பார்க்கிறார். 2011ஆம் ஆண்டு சுவிட்ஸ‌ர்லாந்து குடியுரிமை பெற்றார் ஜெயக்குமார் துரைராஜா. ஒருகாலத்தில் அகதியாக சுவிஸுக்குச் சென்ற துரைராஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்றத்தில் அமர்ந்து வருகிறார்.

இப்போது 56 வயதாகும் இவர், தனது முழு வாழ்க்கையையும் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.          

Leave a Reply